வவுனியாவில் மோட்டார் வண்டி திருட்டு முயற்சி இளைஞர்களால் முறியடிப்பு!!

634

bikeவவுனியா பேராறு நிர்மாணப்பணியில் ஈடுபடும் நீர்வழங்கல் சேவை ஊழியரொருவரின் மோட்டார் வண்டி இனம்தெரியாத நபரொருவரால் திருடும் முயற்சி இளைஞர்களால் முறியடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

பேராறு வேலைத்திட்ட ஊழியர்கள் பிரத்தியோகமாக வவுனியா புதுக்குளம் பகுதியில் தமது அலுவலகத்தில் இரவு நேரங்களில் தங்குவது வழக்கம்.

இதேபோன்று நேற்று தமது நிர்மாண வேலை முடிந்து ஊழியரொருவர் தனது மோட்டார் வண்டியை வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு தங்குமிடத்திற்குள் சென்று திரும்பும் ஒரு சில நொடிப்பொழுதில் இனம் தெரியாத நபரொருவர் மோட்டார் வண்டியை திருடிக்கொண்டு வேகமாக சென்றார்.

இதனை அவதானித்த இளைஞர்கள் மோட்டார் வண்டிகளுடன் துரத்தி சென்றவேளை ஓயார்சின்னக்குளம், மரக்காரம்பளை வீதியில் திருடிய மோட்டார் வண்டியை விட்டுவிட்டு திருடன் தலைமறைவாகியுள்ளார்.

வவுனியா பொலிஸார் சம்பவஇடத்திற்கு வருகைதந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.