வவுனியா பிரதேசசபையில் நடைபெற்ற உள்ளூராட்சி வார நிகழ்வு!!(படங்கள்)

605

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் வாசிப்பு தினம், முதியோர் தினம், சிறுவர் தினம் என்பன வவுனியா முத்தையா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை, கவிதை, ஓவியம் என போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. அதேபோன்று முன்பள்ளி சிறுவர்களுக்கான வங்கிக் கணக்குகளும் ஆரம்பித்துக் கொடுக்கப்பட்டது.

மேலும் வவுனியா பிரதேசத்திலுள்ள முதியோர்களை கௌரவித்ததுடன் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான வடமாகாண சபை சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம், மற்றும் ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா ஆகியோரும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மபால செனவிரட்ண, ஜயதிலக ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைத் தலைவர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், ஜனாதிபதியின் இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிசோர், மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16