வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் யங்பைட் விளையாட்டுக்கழகம் 12வது தடவையாக நடாத்திய தீபாவளி விளையாட்டு திருவிழா தீபாவளியன்று யங்பைட் விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திரு.க.உதயராசா (பிரதேச செலாளர் வவுனியா) திரு.ப.உதயராசா (ஸ்ரீ டெலோ செலாளர் நாயகம் வவுனியா) மற்றும் வடமாகாண அமைச்சின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன், நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் சிறப்புவிருந்தினர்களாக திரு.A .ராஜேந்திரன் (வெங்கடேஸ்வர மார்க்கெட்டிங்), டிண்டி மார்க்கெட்டிங் லிமிடெட் விற்பனை முகாமையாளர், சம்மர் ஹில் விநியோகஸ்தர்கள் முகாமையாளர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பெருமளவிலான கிராம மக்ககளும், கிராம இளைஞர்களும் வருகைதந்து விழாவை சிறப்பித்தனர்.
தொடர்ந்து கிரிக்கெட் இறுதிப் போட்டி இடம் பெற்றது அப்போட்டியில் வெற்றியை அம்மன் விளையாட்டுக் கழகம் தனதாக்கிக் கொண்டது
வெற்றிக்கிண்ணத்தை திரு.A .ராஜேந்திரன் (வெங்கடேஸ்வரா சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்) அம்மன் அணி தலைவர் கார்த்திக்கிடம் வழங்கி வைத்தார். இரண்டாம் இடத்தை பிடித்த அணிக்கான கிண்ணத்தை திரு.S.விஸ்வநாதன் (டிண்டி மார்க்கெட்டிங் லிமிடெட் விற்பனை முகாமையாளர்) ஜங்பைட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு .அசோக்கிடம் வழங்கி வைத்தார் .
மேலும் வடமாகாண அமைச்சின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கான பதக்கங்களை அணிவித்தார். தொடர்ந்து மாலை 7 மணிக்கு HI FI இசைக் குழுவினர் வழங்கிய இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
-பிரதீபன்-















