வவுனியா தமிழ் மாமன்றத்தினர் பெருமையுடன் நடாத்திய “வன்னியின் வாதச்சமர் 2013” முதல்நாள் முடிவுகள்!!

639

vaதமிழ் மாமன்றத்தினர் பெருமையுடன் நடாத்திய “வன்னியின் வாதச்சமர் 2013” இன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 15 பாடசாலையைச் சேர்ந்த 45 மாணவர்கள் இதில் பங்கு பற்றி இருந்தனர்.

பொதுவாக விவாதப் போட்டியில் வெற்றி பெரும் அணி தான் அடுத்த சுற்றுக்குள் முன்னேற முடியும். ஆனால் இந்த வாதச் சமர் லீக் முறையிலே இடம்பெற்றது. லீக் சுற்றிலே ஒரு அணி 4 போட்டிகளை எதிர் கொண்டது. புதுவிதமான ஒரு நேர்த்தியான புள்ளித் திட்டத்தினை தமிழ் மாமன்றம் அறிமுகப்படுத்தியிருந்தது.

இதில் புள்ளிகள் அடிப்படியில் முதல் 8 இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிக்குள் முன்னேறியுள்ளன. இந்த அணிகளிற்கான காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 10-11-2013 அன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் வெற்றி பெரும் அணிக்கு தமிழ் மாமன்றத்தின் கலாசார நிகழ்விலே பரிசில்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது .

காலிறுதிக்குள் நுழைந்த 8 அணிகளின் விபரங்கள் வருமாறு..

va1