வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டது!!(படங்கள்)

712

கடந்த வருடம் பட்டதாரிகள் பயிலுநர் தரத்தில் அரசாங்க சேவையில் உள்வாங்கப்பட்டு இதுவரை காலமும் பல்வேறு திணைக்களங்களிலும் பயிலுநர்களாக கடமையாற்றிவந்த 250 பட்டதாரிகளுக்கே நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக மேற்படி நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் வழங்கி வைத்திருந்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

12 3 4 5