வவுனியாவில் விபத்தில் வீழ்ந்தவரை தூக்கச் சென்றவரை தாக்கியதால் பதற்றம்!!

1397

 

வவுனியாவில் விபத்தில்..

வவுனியா பழைய பேருந்து நிலையம் பிரதான கண்டி வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் வீழ்ந்தவரை தூக்கச் சென்ற இளைஞன் மீது தாக்கியதில் சற்று பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் இன்று மாலை பழைய பேருந்து நிலைய பிரதான கண்டி வீதியில் பயணித்த இளைஞன் ஒருவர் பேருந்து நிலையப் பகுதிக்குத் திரும்புவதற்கு முற்பட்டபோது பிரதான கண்டி வீதியிலிருந்து மணிக்கூட்டுக் கோபுரத்தினை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி மீது மோதியுள்ளார்.

இதையடுத்து விபத்தில் வீழ்ந்த நபரைத் தூக்கச் சென்ற இளைஞன் மீது விபத்தில் வீழ்ந்த நபர் தாக்கியதில் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் இரண்டையும் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய இருவரையும் இளைஞனை தாக்கியதாக தெரிவிக்கப்படும் கருத்திற்கு பேருந்து நிலையப் பகுதியிலிருந்த இளைஞர்கள் சிலரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்கிளினை செலுத்திய நபர் ஒருவர் மதுபோதையிலிருந்துள்ளதாக அப்பகுதியில் நின்றிருந்த விபத்தை நேரில் பார்வையிட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.