வவுனியாவில் 35 இலட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் ஒமந்தையில் மீட்பு!!

775

கடத்தப்பட்ட சிறுவன் ஒமந்தையில் மீட்பு

வவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்றையதினம் (07.03.2019) 8 வயதுடைய சிறுவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் கனகராயன்குளம் , ஒமந்தை, வவுனியா, நெடுங்கேணி பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று (08.03.2019) அதிகாலை கடத்தப்பட்ட சிறுவனின் தாயாருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. உங்களது மகனை ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகே விட்டுள்ளோம். அங்கு சென்று அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுவனின் தயார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து சிறுவன் ஒமந்தை பொலிஸாரினால் மீட்கப்பட்டு ஒமந்தை பொலிஸ் நிலையத்தினுள் வைத்துள்ளனர். சிறுவனிடம் விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னரே கடத்தியவர்கள் தொடர்பான விபரத்தினை வெளியிட முடியுமென ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.