16 பேர் 9A சித்தி

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தது. வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 16 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதன்படி 9A சித்திகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு : அகிலநாயகம் கோகின், ரவிச்சந்திரன் பவர்ஷன், அருள்தாசன் சன்சில்ராஜ், சுபாஸ்கரன் சாருஜன், தவராசன் டயானந்தன், U.சாதித்தியன், செல்வராசா ஜதீஸ், கு.ஹரிசோபனா சர்மா, மங்களகுமார் விகர்ணன், ப.அருள்நேச சர்மா, பவானந்தம் ஐங்கரன், மோகன் யாகவன், ஜெகநாதன் சிவசுதன், சேரலாதன் சாருக்க்ஷன், சிவகுமரன் திவ்யா, வைத்தீஸ்வரன் ஷர்விதன்

அத்துடன் விதுர்சன், வேனுகாந், துலசியன், கபின்சா, கிஷாலன், வரதராஜன் சூர்ஜயன், சகோபிதசர்மா ஆகிய 7 மாணவர்களும் 8A,B பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 228 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.




