வவுனியாவில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைப்பு!!

913

விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

வவுனியா மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் நோக்கிலும், இளைஞர் கழகங்களை வலுப்படுத்தி முன்னேற்றும் நோக்கிலும் வவுனியா மாவட்டத்தில் உள்ள 38 விளையாட்டு கழகங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக 13 விளையாட்டுக் கழகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கட்டார் செரிட்டி நிறுவனம் ஊடாக பெற்றுக் கொண்ட விசேட தேவைக்குட்பட்ட 5 பேருக்கு முச்சக்கர சைக்கிள் வண்டிகளையும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உப நகர பிதா சு.குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் மகேந்திரன், வவுனியா நகரசபை உறுப்பினர் பாயிஸ், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.