சிகையலங்கார நிலையங்கள்..

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து கடந்த மாதம் 20ம் திகதியுடன் (20.03.2020) மூடப்பட்டிருந்த வவுனியாவிவுள்ள அனைத்து சிகையலங்கார நிலையங்களும் 26நாட்களுக்கு பின்னர் இன்று (16.04.2020) திறக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து வவுனியா உட்பட் நாட்டின் பல பாகங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்து.

இவ்வாறு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருதடவை 10 மணிநேரம் தளர்த்தப்பட்டடு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இக் காலப்பகுதியில் சுகாதாரத்தினை கருத்தில் கொண்டு சிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அனுமதி வழங்கவில்லை.

சித்திரை புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு 26 நாட்களின் பின்னர் இன்றையதினம் ஊரடங்கு தளர்வு நேரத்தில் வவுனியாவிலுள்ள அனைத்து சிகையலங்கார நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.





