வவுனியாவிலுள்ள அனைத்து ம துபான விற்பனை நிலையங்களும் மறு அறிவித்தல் வரை பூட்டு!!

623

மறு அறிவித்தல் வரை பூட்டு..

நாட்டிலுள்ள அனைத்து ம துபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு அரசாங்கம் இன்று (21.04.2020) காலை 8.30 மணியளவில் பிறப்பித்த உத்தரவினையடுத்து வவுனியாவிலுள்ள அனைத்து ம துபான விற்பனை நிலையங்களும் இன்று திறக்கப்படவில்லை.

நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நேற்றைய தினம் ம துபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் மறு அறிவித்தல் வரையில் ம துபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்தல் விடுத்துள்ளது.

ம துபான விற்பனை நிலையங்களை திறப்பது சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பு ஆரோக்கிய வழிமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விடுத்த அறிவுறுத்தல்களுக்கு அமைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.