வவுனியாவில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்று வருவோருக்கு கொரோனா பரிசோதனை!!

897

கொரோனா பரிசோதனை..

வவுனியாவில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக பிற மாவட்டங்களுக்கு சென்று வரும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைகளத்தில் இன்று (27.04) காலை குறித்த பரிசோதனை சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் இருந்து அத்தியாவசிய தேவைகளின் பொருட்டு கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை அறிவதற்கான பீ.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.