ஆசிரியர் தின நிகழ்வு…

அகில இலங்கை ரீதியாக நேற்றைய தினம் (06.10) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையிலும் ஆசிரியர் தினம் இடம்பெற்றது.

ஆசிரியர்கள் பாடசாலை அருகில் உள்ள குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டு மாணவர்களின் பான்ட் வாத்திய வரவேற்புடன் ஆசிரியர்கள் வரவேற்கப்பட்டு,

பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தமையுடன் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.

மேலும் பாடசாலை மாணவர்களால் கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டிருந்ததுடன் தமது ஆசிரியர்களை பரிசில்கள் வழங்கியும் மாணவர்கள் கெளரவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





