காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

510

சென்னையில்..

சென்னையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவர் போலீசில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சின்னம்மன் கோவில் தெரு ஜீவா நகரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அம்பத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சாரம்மாள் என்ற பெண்ணுடன் ஜான்சனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாரம்மாள் என்ற பெண்ணை 5 மாதங்களுக்கு முன்னர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

சாராம்மாள் ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து புதிய திருமணம் செய்த விபரம் ஜான்சனுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஜான்சன் சாரம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு உடலை கோணிப்பையில் கட்டி வைத்துவிட்டு தலைமறைவானார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கோணிப்பையில் கட்டி இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதை அறிந்த ஜான்சன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.