வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 25 ஆவது வீரமக்கள் தினம் இன்றுமுதல் அனுஷ்டிப்பு!!!

849

samaathi

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்றுமுதல் (13.07) எதிர்வரும் நான்கு தினங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 25 ஆவது வீரமக்கள் தினம் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

13.07.2014 இன்று காலை 09.00 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக மலரஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து 16.07.2014 புதன்கிழமை மாலை 03.30 மணிக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவு தினமான வீரமக்கள் தின அஞ்சலி நிகழ்வு நடைபெறும் என ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.

மறைந்த தோழர்கள், அனைத்துப் போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெறும் அஞ்சலி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து தமது அஞ்சலியினை செலுத்துமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் வேண்டி நிற்கின்றனர்.