
வவுனியா மகாறம்பைக்குளம் மதுரைவீரன் வீதியில் கடந்த 14.07 அன்று இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த சமீலா என்ற 22 வயதுப் பெண்ணுக்கும் அவரது கணவரான பாலகிருஷ்ணன் என்பவருக்கும் அடிக்கடி தகறாரு ஏற்பட்டு வந்துள்ளது.
இன் நிலையில் சம்பவ தினத்தன்று மனைவி அறையில் படுத்திருந்ததாகவும் தான் வெளியில் படுத்திருக்கும் போது கதவைப் பூட்டிய மனைவி, தான் உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கியதாகவும் அவரது கணவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




