தகாத உறவால் 24 வயது யுவதி கொடூரமாக கொலை!!

581

தகாத உறவால் அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சச்ம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஆவார். சம்பவத்தன்று, குறித்த யுவதி தன்னுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்

இதன்போது சந்தேக நபர் யுவதியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.