புதிதாக வாகனங்களை வாங்கியோருக்கு வெளியான முக்கிய தகவல்!!

261

வாகனங்களுக்கான எண் தகடுகள் வழங்கும் பணி மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க நேற்று (02) இதனை தெரிவித்துள்ளார்.

திணைக்களம் 25 ஆண்டுகளாக எண் தகடுகளை வழங்கி வருவதாகவும், புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஒரு புதிய நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய நிறுவனம் ஜனவரி மாத நடுப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், எண் தகடுகளை அச்சிட அமைச்சரவை மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளதாகவும் ஆணையர் நாயகம் கூறியுள்ளார்.

எண் தகடுகளை அச்சிடும் பணி வேரஹெர கிளையால் மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

சுமார் 500,000 வாகனங்களுக்கு புதிய எண் தகடுகள் வழங்கப்பட உள்ளதாகவும், அவற்றில் மிகப்பெரிய எண்ணிக்கை மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் பிற வாகனங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.