வாழவே பிடிக்கவில்லை : காதலனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

21

பெங்களூருவில் தனது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்தவர் தேஜூ (20). கல்லூரி மாணவியான இவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரியவந்ததை அடுத்து, அவரது பெற்றோர் இந்தக் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த சில நாட்களாகவே தேஜூ மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய அவர், தனது காதலனின் வாட்ஸ்அப் எண்ணிற்கு “எனக்கு வாழப் பிடிக்கவில்லை” என்று உருக்கமாக மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

காதலனுக்கு மெசேஜ் அனுப்பிய சில நிமிடங்களிலேயே, அங்குள்ள புகழ்பெற்ற சாங்கி ஏரியில் குதித்துத் தேஜூ தற்கொலை செய்துகொண்டார்.

மாணவியின் குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்த காதலனும், குடும்பத்தினரும் தேடிய நிலையில், அவர் ஏரியில் குதித்தது தெரியவந்தது.

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர், ஏரியில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி மாணவி தேஜூவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.