17 வயது மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை – வவுனியா கூமாங்குளத்தில் சம்பவம் ..!

523

suicideவவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17) என்ற மாணவி தனது வீட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த  வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர், கிணற்றுக்குள் குதித்தமையால் நீரில் முழ்கி இம் மரணம் இடம்பெற்றுள்ளதாகவும், இது ஒரு தற்கொலையெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.