காதலை ஏற்க மறுத்த இளம் பெண் குத்திக் கொலை… பதுங்கி இருந்த இளைஞன் அதிரடியாக கைது!!

கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே உள்ள பெண்டிகிரியை சேர்ந்த அஞ்சலி என்பவரை விஷ்வா என்ற கிரீஷ் நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய மறுத்தால் அஞ்சலியை கொன்றுவிடுவதாக கிரீஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அஞ்சலி போலீசில் புகார் அளித்துள்ளார். கிரிஷால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அஞ்சலி புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை கிரீஷ், அஞ்சலியின் வீட்டுக்குச் சென்று காதலை ஏற்கும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அஞ்சலி மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால் அஞ்சலியை கிரீஷ் குத்திவிட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் அஞ்சலி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அஞ்சலி கொலை வழக்கில் கிரிஷை போலீசார் 2 நாட்களில் கைது செய்தனர்.

அஞ்சலி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்த போதிலும் அலட்சியமாக செயல்பட்டதால் பெண்டிகிரி காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை ஒப்படைத்த இந்திய சிறுவன்… கௌரவித்த துபாய் அரசு!!

துபாய் வீதியில் கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை எடுத்துக் கொடுத்த இந்திய சிறுவனுக்கு துபாய் பொலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

துபாய் காவல் துறையானது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில் கண்டுபிடிக்கவும் ‘ஸ்மார்ட் காவல்நிலையம்’ என்ற ஒன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய சிறுவனான முகமது அயன் யூனிஸ் என்பவர் தனது தந்தையோடு துபாய் வீதிகளில் சில நாட்களுக்கு முன்பு உலாவியுள்ளார். அப்போது கீழே கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை கண்டுள்ளார். இது தொடர்பாக ‘ஸ்மார்ட் காவல்நிலையம்’ என்ற இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையறிந்த துபாய் காவல்துறை சிறுவனிடம் இருந்து கைக்கடிகாரத்தை பெற்றுக் கொண்டனர். பின்னர், கடிகாரத்தை தொலைத்த சுற்றுலா பயணியிடம் அதை ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக துபாய் சுற்றுலா காவல் துறை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “நேர்மைக்கு முன்னுதாரணமாக இருந்த இந்திய சிறுவன் முகமது அயன் யூனிஸை துபாய் போலீஸ் மனதார பாராட்டி கௌவுரவிக்கிறது” என்று கூறியுள்ளது.

இலங்கையில் விரைவில் இ-பாஸ்போர்ட் முறை!!

நாட்டில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதோடு , பாதாள உலக மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

யாழில் ஹோட்டலில் கொத்து றொட்டி வாங்கிய ஊடகவியலாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் (15-05-2024) மாலை ஊடகவியலாளர் ஒருவர் குறித்த கடையில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருடன் கடையினுள் இருந்தவாறு குறித்த ஊடகவியலாளர் தொடர்பு கொண்டார். இருப்பினும் அன்றையதினம் குறித்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதரால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.

எனினும், குறித்த ஊடகவியலாளர் கடையிலிருந்து உணவிற்காக பற்றுச்சீட்டு குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனைத்தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கினார் என்பது தொடர்பான முறைப்பாடு ஒன்றினை குறித்த ஊடகவியலாளர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தார்.

முறைப்பாட்டு கடிதத்தினை ஆதாரமாகக் கொண்டு நேற்றையதினம் குறித்த ஹோட்டலை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும், தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை இறைச்சினை கொல்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தெரிய வந்தன.

இதனைத்தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அளவிடப்பட்டு உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

எப்போ திருமணம் என கேட்டு தொடர்ந்து தொல்லை செய்த காதலி.. மனமுடைந்த காதலன் எடுத்த விபரீத முடிவு!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் தஹிவாடியை சேர்ந்தவர் பாபு காலே (18). 12ம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், பாபுவை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பாபு வீட்டிற்கு சென்ற சிறுமி மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். சிறுமியை சமாதானப்படுத்தியும் பாபுவும் அவரது பெற்றோரும் கேட்கவில்லை.

அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இல்லையேல் வீட்டுக்கு செல்லமாட்டேன் என சிறுமி பிடிவாதம் பிடித்துள்ளார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின், சிறுமி அமைதியடைந்து, அவரது வீட்டிற்கு சென்றார்.

இதனால் மனமுடைந்த பாபு வீட்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டார். பெற்றோர், உறவினர்கள் கதவைத் தட்டி திறக்கும்படி சத்தம் போட்டனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாபு தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு தூண்டியதாக சிறுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலி கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற உயிரிழந்தவர்களின் நினைவுகூறல் நிகழ்வில் சலசலப்பு!!

வவுனியாவில் இடம்பெற்ற உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் குறித்த நிகழ்வு தொடர்பில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

வவுனியா நகரசபை மைதானத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மூவின மக்களின் நினைவேந்தல் நிகழ்வு என அறிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதன்போது அங்கு அறிவிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு, வெற்றி பெற்றமைக்கான நிகழ்வு, போரில் உயிரிழந்தர்வர்களுக்கான நிகழ்வு, முள்ளிவாய்காலில் மரணிமத்தவர்களுக்கான நிகழ்வு என மாறி மாறி அறிவிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து நிகழ்வு ஏற்பாட்டபாளர்கள் இது போரில் இறந்தவர்களின் நிகழ்வு என அறிவிக்கும்படி தெரிவித்திருந்தனர். இதனால் குறித்த நிகழ்வு எதற்காக என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருந்ததுடன், ஏற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைக்கு அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலரும் விசனம் தெரிவித்து முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் மழை பெய்யத் தொடங்கியதும் மழையில் நனைந்து கொண்டிருந்த போது உரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையாலும் அங்கு சலசலப்பு ஏற்பட்டு மக்கள் தீபம் ஏற்றிவிட்டு வெளியேறிச் சென்றிருந்தை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் போரால் உயிரிழந்தவர்களுக்கு மூவின மக்களும் இணைந்து அஞ்சலி!!

வவுனியாவில் போரால் உயிரிழந்தவர்களுக்கு மூவின மக்களும் இணைந்து அஞ்சலி நிகழ்வு ஒன்றினை இன்று (18.05.2024) மேற்கொண்டிருந்தனர்.

வன்னி மக்கள் ஒன்றியம் மற்றும் போரினால் உயிரிழந்த உறவுகளின் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்புக்களின் பெயரில் குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வு நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

கண்டிய நடனம், மேளதாள வாத்தியம் என்பவற்றுடன் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தலைவர்கள், அரச சார்பு கட்சி உறுப்பினர்கள் உட்பட்ட அதிதிகள் வரவழைக்கப்பட்டு விருந்தினர் மேடையில் அமைரச் செய்யப்பட்டதுடன், மதத் தலைவர்களின் ஆசி உரைகளும் இடம்பெற்றது.

இதன்போது போரால் உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நினைவாக தீபம் ஏற்றப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட எலுமிச்சை மற்றும் இஞ்சி விலை!!

இலங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக சந்தையில் க ரட்டின் விலை அதிகரித்துள்ளதைப் போன்று, நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ எலுமிச்சை விலையும் 3000 ரூபாவைத் தாண்டியுள்ளது.

ஊவா மாகாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு எலுமிச்சை பழம் விநியோகிக்கப்படுவதாகவும், ஆனால் முன்பைப் போன்று போதியளவு எலுமிச்சை பழம் கிடைப்பதில்லை எனவும் அந்த நிலையம் தெரிவிக்கின்றது.

பழம் ஒன்று நூறு ரூபா

இதனால், எலுமிச்சை பழத்தின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சில கடைகளில் எலுமிச்சை பழம் ஒன்று நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பேலியகொடை சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 3,200 ரூபாவாக நேற்றைய தினம் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் குடும்ப பெண் படுகொலை.. வெளியான புகைப்படம்.. கணவன் அதிரடி கைது!!

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (10-05-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சம்பவத்தில் உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கொலை செய்யப்பட்டுள்ள குடும்ப பெண்ணின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி பொலிஸார் சடலத்தை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.

உடற்கூற்று பரிசோதனையில் துணி ஒன்றினால், பெண்ணின் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண் கொலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் பெண்ணின் கணவரை நேற்றையதினம் (15-05-2024) கைது செய்துள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, தர்க்கம் ஏற்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின், அடிப்படையில் பெண்ணின் கணவரை பொலிஸார் கைது விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்னல் தாக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின், மால்டா மாவட்டத்தில் நேற்றைய தினம் (16.05) மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையிலேயே இவ் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மின்னல் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

வீதியில் நின்ற வேப்ப மரத்தால் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி!!

அநுராதபுரம் – கண்டி வீதியில் காவக்குளம் சந்தியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மரமொன்று வீழ்ந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று(17) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொலிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அநுராதபுரம் போதனா பொது வைத்தியசாலை அனுமதிக்கபப்ட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட இளம் ஜோடிகள்!!

ரயில் வரும் நேரத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருவரும் கட்டிப்பிடித்து நின்றுள்ளனர். சுற்றியிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உடல் சிதறி இறந்தார்கள்

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு மாதம் மட்டுமே காதலித்த ஜோடி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்கள் வந்து விட்ட பிறகு காதல் என்ற விஷயத்தில் பல விபரீத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்றுள்ளது.

அங்குள்ள கிளிக்கொல்லூர் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக இளம் வயதுடைய ஆணும், பெண்ணும் அந்த வழியாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கிளிக்கொல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடல்களை கைப்பற்றி அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில், ரயில் வரும் நேரத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருவரும் கட்டிப்பிடித்து நின்றதாகவும், சுற்றியிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உடல் சிதறி இறந்தார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனை அடிப்படையாக கொண்டு இவர்கள் காதல் ஜோடியாக இருக்கலாம் என போலீசார் கண்டறிந்தனர். ஆனால் அவர்களை அடையாளம் காண முடியாமல் திணறினர்.

இப்படியான நிலையில் இறந்தவர்களில் அந்த இளைஞர் கொல்லம் சந்தனத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சசிதரன் என்பவரது மகன் அனந்து என்பது, அப்பெண் கொச்சி களமசேரி பகுதியைச் சேர்ந்த மது என்பவரது மகள் மீனாட்சி என்பதும் தெரிய வந்தது. ஆனந்து கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டும், மீனாட்சி 12 ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் வெளியான தகவல்படி, இருவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னால் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

சம்பவம் நடந்த அன்று சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு ஆனந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதேபோல் மீனாட்சி பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் வாங்க செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

காதலை வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் கொல்லம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 குழந்தைகளைத் தவிக்க விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இளம்பெண்.. இஸ்லாம் மீது குற்றச்சாட்டு!!

முத்தலாக் கூறி தனது கணவர் பிரிந்து சென்றதால் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இளம்பெண் ஒருவர் மதம் மாறி இந்து இளைஞரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்தவர் ரூபினா. இவரை காதலித்து ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனது மனைவியை முத்தலாக் கூறி அவரது கணவர் பிரிந்துள்ளார்.

இந்தியாவில் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற விவாகரத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மிஸ்டு கால் மூலம் பிரமோத் காஷ்யப் என்ற இளைஞருடன் ரூபினாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதன்பின் இந்த பழக்கம் இன்ஸ்டாகிராமில் வலுப்பெற்றது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதனால் தனது இரண்டு குழந்தைகளை விட்டு ரூபினா, பிரமோத்தை தேடிச்சென்றார்.

அத்துடன் அவரை திருமணம் செய்ய மதம் மாறினார். ரூபினா என்ற தன் பெயரை ப்ரீத்தி என்று மாற்றிக் கொண்டார். இதையடுத்தும் அவருக்கும், பிரமோத் காஷ்யப்பிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து பசுவின் சிறுநீர் மற்றும் கங்கை நீரால் ப்ரீத்தியை கே.கே.சங்கதர் என்ற சாமியார் சுத்தப்படுத்தினார்.

திருமணத்திற்குப் பிறகு பேசிய ப்ரீத்தி, இஸ்லாத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்று கூறினார். இஸ்லாத்தில் பெண்கள் அடிக்கடி சித்ரவதைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

பிரமோத் என்னை இந்து மதத்தை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. என் விருப்பத்தின் பேரில் தான், இந்து மதத்தை ஏற்றுக் கொண்டேன் என்றும் அவர் கூறினார்.

கல்யாணமாகி 4 மாதத்தில் புதுமணத் தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா பகுதியில் வசித்து வருபவர் 30 வயது மனோஜ் குமார். அதே பகுதியில் வசித்து வந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 4 மாதம் ஆன நிலையில் மனோஜ் குமார் தன்னுடைய மனைவி மற்றும் தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவருடைய தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊருக்கு சென்றுவிட்டார்.
அப்போது மனோஜ்குமார் மற்றும் ராக்கி இருவரும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு மனோஜ் குமார் மற்றும் ராக்கி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. மனோஜ் குமாரின் தாய் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது இருவரும் வீட்டில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கத்தி கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் காவல்துறை இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை மறந்து விட்டு சென்ற பெற்றோர்.. காருக்குள் மூச்சு திணறி உயிரிழந்த சோகம்!!

காருக்குள் குழந்தையை மறந்து தனியே விட்டு விட்டு பெற்றோர் கீழிறங்கிய நிலையில், காருக்குள்ளே மூச்சுத்திணறி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கடோலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் சாகர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் நேற்று இரவு திருமண விழாவுக்குச் சென்றுள்ளார். திருமண இடம் வந்ததும் மனைவியும் மூத்த மகளும் காரில் இருந்து இறங்கினர்.

தனது இரண்டாவது மகள் கோர்விகாவும் (வயது 3) இறங்கி விட்டதாக நினைத்து பிரதீப் காரை பார்க்கிங் பகுதிக்கு ஓட்டி சென்று காரை பூட்டிவிட்டு திரும்பி வந்தார்.

இரண்டு குழந்தைகளும் மனைவியுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். நீண்ட நேரமாக அவர்களை சந்திக்கவில்லை. உறவினர்களை சந்திப்பதில் மும்முரமாக இருந்தார். அதேபோல், கணவருடன் இருப்பதாக நினைத்த கோர்விகாவின் மனைவி, வேறு பகுதியில் அமர்ந்து உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

சுமார் 2 மணி நேரம் கழித்து, கணவன்-மனைவி சந்தித்தனர். கோர்விகா எங்கே? ஒருவரையொருவர் விசாரித்ததில், குழந்தையை காணவில்லை என்பது தெரியவந்தது. குழந்தையை தேட ஆரம்பித்தனர். திருமண விழா நடக்கும் பகுதி முழுவதும் தேடிவிட்டு நேராக காருக்கு வந்தனர்.

காரைத் திறந்து பார்த்தபோது, குழந்தை மூச்சுத் திணறி அசையாமல் கிடந்தது. குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு காருக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை உணர்ந்த கணவன், மனைவி இருவரும் அலறி துடித்தனர். காடோலி போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, தங்களின் தவறு காரணமாக குழந்தை இறந்ததால், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாங்கள் விரும்பவில்லை என்றும், வழக்கு பதிவு செய்ய விரும்பவில்லை என்றும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.