பாண் வியாபாரத்தில் போட்டி: வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில்!

330

jaffnaயாழ்ப்பாணத்தில் பாண் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாண் விற்பனையில் ஈடுபடும் வெதுப்பகங்களில் ஏற்பட்ட போட்டியே இத்தாக்குதலுக்கு காரணமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சுதுமலையில் உள்ள வெதுப்பகத்தில் வேலை செய்யம் இளைஞன், முச்சக்கர வண்டியில் பாண் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சுன்னாகம் பிரதேசத்தில் வைத்து குறித்த முச்சக்கர வண்டியை வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் குறித்த இளைஞனைத் வாளால் வெட்டியுள்ளனர்.

வாள் வெட்டில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியாசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடாநாட்டில் இயங்கிவரும் அநேகமான வெதுப்பகங்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்குடன் போட்டி போட்டுக்கொண்டு முச்சக்கர வண்டி மூலம் நடமாடும் பாண் விற்பனையை ஆரம்பித்துள்ளன.

இந் நடமாடும் சேவையினால் பாவனையாளர்கள் நன்மையடைந்துள்ள போதிலும் இதுவரை காலமும் பாண் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறுசிறு வியாபாரிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் போட்டி மனப்பான்மையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இப்போட்டியே குறித்த இளைஞன் தாக்கப்படக் காரணமென பொரு மக்கள் தெரிவிக்கின்றனர்.