இரு பிள்ளைகளை தெருவில் கைவிட்டு சென்ற தந்தை: பொலிஸார் வலைவிரிப்பு..!

346

homaஹோமாகம பிரதேசத்தில் தாயற்ற இரண்டு பிள்ளைகளை, காவல்துறை நிலையத்திற்கு அருகாமையில் கைவிட்டுச் சென்ற பிள்ளைகளின் தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர்.

6 மற்றும் 8 வயதான இந்த பிள்ளைகள் தமது தந்தையுடன் ஹோமாகம பிற்றிபன பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னதாக அவர்களின் தாய் குறித்த பிள்ளைகளை கைவிட்டுச் சென்ற நிலையில் அவர்களை, தந்தையே பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிள்ளைகளை சுற்றுலாவொன்றிற்கு அழைத்துச் செல்வதாக ஹோமாகம காவல்துறைக்கு அருகாமையில் கைவிட்டுச் சென்றுள்ளார்.

கடையொன்றிற்குச் சென்று பொருட்களை வாங்கி வருவதாக கூறிச் சென்ற தந்தை பல மணிநேரங்களாகியும் திரும்பி வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த பிள்ளைகளை காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.