மீன் என தவறாக நினைத்து நண்பரை சுட்டுக் கொன்ற நபர்: கடலில் நிகழ்ந்த சோகம்!!

271

3558807-vibrant-photo-of-a-young-adult-swimming-underwater

ரஷ்யா நாட்டில் மீன் பிடிக்க சென்றபோது பெரிய மீன் சிக்கியுள்ளதாக தவறாக நினைத்து தனது நண்பரை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய ரஷ்யாவில் உள்ள Ryazan என்ற மாகாணத்தில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 9ம் திகதி நண்பரை பார்ப்பதற்காக 27 வயதான நபர் ஒருவர் மோஸ்கோ நகரில் இருந்து புறப்பட்டுள்ளார்.நண்பர்கள் இருவரும் சந்தித்த பிறகு, இரவு வேளையில் மீன் பிடிக்க செல்ல திட்டமிட்டுள்ளனர்.நபர் மீன் பிடிப்பதில் திறமையானவர் என்பதால், நண்பரை வேறு பகுதியில் மீன்களை தேடுமாறு அனுப்பியுள்ளார்.

மீன்களை வேட்டையாடுவதற்கு ஈட்டி போன்ற ஆயுதத்தை பயன்படுத்துவார்கள். இந்த ஆயுதத்துடன் நபர் மீன்களை தேடி அங்கும் இங்கும் அலைந்துள்ளார்.அப்போது, தூரத்தில் catfish வகையை சேர்ந்த மீன் ஒன்று நீந்தி செல்வதாக பார்த்த நபர் தனது கையில் இருந்த ஈட்டியால் சுட்டுள்ளார்.

துரதிஷ்டவசமாக நபரின் குறி தவறாமல் தாக்கியுள்ளது. சிறிது நேரத்திற்கு பிறகு நபர் தவறாக சுட்டது தனது நண்பரை என தெரியவந்தது.இந்த சம்பவத்தில் 27 வயதான நபருக்கு படுகாயம் ஏற்பட்டதால், அவர் கடலிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மீன் பிடிக்க சென்றபோது நிகழ்ந்த இந்த சோக சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.