ஞாபக மறதியைப் போக்கும் புரோட்டின் கண்டுபிடிப்பு!!

357

amnesia-global-transitoria

வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை மாற்றக் கூடிய ஒரு புரோட்டினை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நியூயோர்க்கின் கொலம்பிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் தமது முடிவுகளை ஒரு ஆய்வு சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புதிய முன்னேற்றம் காரணமாக மறதி நோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த குறிப்பிட்ட புரோட்டினை (RbAp48) உட்கொண்ட வயதான எலிகள், இளம் வயதில் இருக்கும் எலிகளைப் போல ஞாபக சக்தியைப் பயன்படுத்தி செய்யும் வேலைகளை செய்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதியானது அல்சைமர் நோயுடன் சம்மந்தப்படாத தனி நிலை என்பதற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள்.