வவுனியா புளியங்குளம் A9 பயணிகளின் திருப்பணியில் உருவான ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோவிலின்மகா கும்பாபிசேகம்!(படங்கள்)

385

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய கும்பாபிசேகம் 26  வருடங்களின் பின்னர்இன்று காலை  15.09.2016 வியாழக்கிழமை   6.30 முதல் 8.30 வரையான  சுப  வேளையில்   நூற்றுகணக்கான  அடியவர்களின் அரகரோகரா  முழக்கத்தின்  மத்தியில்    ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ கே .பி. நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்றது .

அதிகாலை முதல் கும்பாபிசேக  கிரியைகள் ஆரம்பமாகி  காலை  எட்டுமணியளவில்  கும்பாபிசேகம் இடம்பெற்றதோடு  தொடர்ந்து திருக்கதவு திறந்து அபிசேக ஆராதனைகள்  இடம்பெற்று  வருகின்றது ..

 

கோவில் பற்றிய அறிமுகம் 

கடந்த மூன்று தசாப்த காலத்தில் நாட்டில்  நிலவிய அசாதாரண நிலைமை  மற்றும் தொடர்ச்சியான  இராணுவ நடவடிக்கைகள்  இடப்பெயர்வுகள் என்பவற்றுக்கப்பால் ஆலய நிர்மாண வேலைகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிசேகம் இடம்பெறுகிறது .

A9  வீதியால் பிரயாணம் செய்யும் அனைவரது காதுகளிலும் கேட்டுபழகிய  திருப்பணி நிதி சேகரிக்கும் புளியங்குளத்தை சேர்ந்த  இராமநாதனின் இந்த  வார்த்தைகள்  அந்த ஆலயத்தை உங்கள் ஞாபகத்துக்கு கொண்டுவரும் .

வலக்கை வளமில்லாவிட்டால் எட்டி இடக்கையாலும் போடலாம்.!

சில்லறை இல்லாவிட்டால் பரவாயில்லை  தாளாகவும் ஏற்றுகொள்ளப்படும்!

இந்த வார்த்தைகள் தான் புளியங்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தை உங்கள்  நினைவுக்கு கொண்டுவரும்.

இந்த முத்துமாரியம்மன் ஆலய திருப்பணியில் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த அடியார்கள் மட்டுமன்றி  இலங்கை மற்றும்  வெளிநாடுகளிலிருந்தும்  வடபகுதி  நோக்கி பயணம் செய்யும் தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் வெள்ளையர்கள் என  வேறுபாடின்றி அனைவரது  பூரண ஒத்துழைப்புடனும்  வாகன சாரதிகளின் தாராளமான பங்களிப்புடனும்  ஆலயத்துக்குரிய  திருப்பணி நிதியை இரவு பகல் பாராது தொடர்ச்சியாக தொண்டர்கள் ஒவ்வொரு பேருந்துகள் மற்றும் கண்டி வீதி வழியாக பயணம் செய்யும் அனைத்து வாகனங்களையும்  மறித்து  முத்துமாரி அம்பாளது  விபூதி பிரசாதம்  முதலியவற்றை வழங்கி பயணிகள்  சாரதிகளிடம் திருப்பணி நிதியினை சேகரித்து இன்று அனைவரது பங்களிப்புடன்  மிக அழகானதொரு ஆலயமாக  வடிவமைக்கபட்டுள்ளது உண்மையிலே பாராட்டுதலுக்குரியது .

இலங்கையின்  வரலாற்றில் முருகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அடுத்தபடியாக  அனைத்து   இன மத பேதமின்று அனைவரின்   பங்களிப்புடன் அமைக்கபட்ட ஒரேயொரு கோவிலாக  வவுனியாவின் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள  முத்துமாரியம்மன் திருக்கோவில் விளங்குவது பெருமைக்குரிய விடயமாகும்.

தமிழ் நாட்டை சேர்ந்த சிற்பகலைஞர்களால் மிக அழகாக  அமைக்கபட்டுள்ள இந்த  ஆலயத்தை   இனிவரும் காலங்களில்  அனைவரும் தரிசித்து செல்லமுடியும்.

மேற்படி ஆலயத்தின்  மகா கும்பாபிசேகம்  சிவஸ்ரீ .நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெறுகிறது.

 

கும்பாபிசேக படங்கள் : சாந்தன் சர்மா

14264870_1810866605861789_1678745835765636191_n 14370215_1810862955862154_2180098418463024850_n 14370214_1810866562528460_6957655542390802398_n 14368628_1810862979195485_1315195381496163524_n 14358654_1810864235862026_985174968157828389_n 14344882_1810864722528644_4356284888991204197_n 14344329_1810866435861806_3970086448605763692_n 14333705_1810865065861943_5827692512862473469_n 14330019_1810862882528828_8935934335448227123_n 14329973_1810863902528726_148620799675120946_n 14322252_1810869075861542_3918147315420188887_n 14317523_1810864629195320_4175163212441989341_n 14291910_1810865159195267_8298162923167253214_n 14264956_1810863039195479_5593098239064837639_n 14264956_1810863039195479_5593098239064837639_n-1