அமெரிக்க விமான தாக்குதலில் 6 பேர் பலி!!

420

us

பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளின் முகாம்களை அழிப்பதற்காக அமெரிக்கா தொடர்ந்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

நாட்டின் இறையாண்மையை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக கூறி தொடர் போராட்டம் நடந்து வந்தாலும் அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. இந்நிலையில் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் எல்லை அருகில் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள தர்கா மண்டி என்ற கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தியது.

அப்போது நேட்டோ படைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹக்கானி நெட்வொர்க் தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியில் 3 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து சி.ஐ.ஏ.வின் உளவு விமானங்கள் அப்பகுதியில் தாழ்வாகப் பறந்து கண்காணிப்பதாக உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் இதுவரை அமெரிக்கா 400 முறை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 565 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் போராளிகள் அல்லாத பலரும் இதில் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரச்சினை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.