ஏலத்திற்கு வரும் 118.28 கரட் எடை கொண்ட இராட்சத வைரம்!!

342

diamond

ஆபிரிக்க நாட்டில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கடந்த 2011ம் ஆண்டில் ஒரு இராட்சத அளவிலான வைரக்கல் தோண்டி எடுக்கப்பட்டது. அது 299 கரட் எடை இருந்தது.

பின்னர் அது பட்டை தீட்டப்பட்டு 118.28 கரட் எடை ஆக மாறியது. வெள்ளை நிறத்தினால் ஆன அந்த வைரக்கல் பளபள வென ஜொலிக்கிறது.

கோழி முட்டை அளவிலான இந்த வைரக்கல் ஹொங்கொங்கில் உள்ள சோத்பீ என்ற மையத்தில் வருகிற அக்டோபர் மாதம் ஏலம் விடப்படவுள்ளது.

இந்த தகவலை சோத்பீ ஏல மையத்தின் துணை தலைவர் கயக்கின் யிவோ லண்டனில் தெரிவித்தார். கடந்த ஆண்டு 101.73 கரட் எடையுள்ள வைரம் அதிக விலைக்கு ஏலம் போனது ($26.7 மில்லியன்).

தற்போது இந்த வைரம் அதன் விற்பனை சாதனையை முறியடித்து கூடுதல் விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் சேர்த்து 7.59 கரட் எடையுள்ள நீல நிற வைரமும் ஏலத்தில் விடப்படுகிறது.