மன்னார் அடம்பன் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
27 வயதான சத்தியதேவா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், மன்னாரில் குடும்பத்தினருடன் தற்காலிகமாக வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவரது சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.