எறும்பு கடித்து 12 வயது மாணவன் பரிதாப பலி!!

316

ants

காற்பந்து பயிற்சியின் போது விஷ எறும்பு கடித்ததில் அலர்ஜி ஏற்பட்டு 12 வயது சிறுவன் பலியானான். அமெரிக்காவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் வருடத்திற்கு இதுபோன 40 பேர் விஷப்பூச்சிகளால் கடிக்கப்பட்டு உயிரிழப்பதாக தரவுகள் கூறுகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் தென் பகுதியில் உள்ள பள்ளியில் படித்த மாணவன் கேமரூன் எஸ்பினோசா (12).கால் பந்தாட்ட வீரர். தினமும் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு மைதானத்தில் எஸ்பினோசா பயிற்சிக்கு போகும் போது தண்ணீர் போத்தல் எடுத்து சென்றான்.

அதை மறதியாக தரையில் வைத்து விட்டான். விளையாடும் போது தண்ணீர் தாகம் எடுத்ததும் தண்ணீர் போத்தலை எடுக்க வந்துள்ளான். அப்போது அதில் ஏராளமான எறும்புகள் இருந்தன. அவற்றை கையால் தட்டி விட்டு தண்ணீரை குடித்துள்ளான்.

அப்போது எபினேசரை எறும்பு கடித்தது. இதில் உடம்பில் பல இடங்களில் அவனுக்கு வீக்கம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி எஸ்பினோசா இறந்தான்.

இதுகுறித்து மாணவனுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் கூறுகையில், எஸ்பினோசனை எறும்பு கடித்ததில் அலர்ஜி ஏற்பட்டு இறந்துவிட்டான் என்றார். இறந்த மாணவனின் தாய் ஜோஸ்பின் லிமோ கூறுகையில், கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரனாக வேண்டும் என்று கனவு கண்டான். இப்போது எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டான் என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதுகுறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர். மைதானத்தில் உள்ள எறும்புகள் விஷத் தன்மை உள்ளவை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.