இங்கிலாந்து, பின்லாந்து கடவுச்சீட்டு இருந்தால் உலகத்தையே சுற்றிப் பார்க்கலாம்!!

555

Passports

பின்லாந்து, இங்கிலாந்து நாட்டின் கடவுச்சீட்டு மட்டும் இருந்தால் இந்த உலகத்தையே சுற்றி பார்க்கலாம்.

ஹென்லி அண்ட் பார்ட்ர்னர்ஸ் என்ற நிறுவனம் 2013ம் ஆண்டுக்கான விசா கட்டுப்பாட்டு குறியீட்டெண் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதவாது எந்நாடு விசா இல்லாமல் மக்களை சுதந்திரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்குகிறது என்பதை பொறுத்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பின்லாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அதே போல சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருந்தால் உலக அளவில் 173 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்.

அமெரிக்க கடவுச்சீட்டு இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. அவர்கள் 172 நாடுகள் வரை விசா இல்லாமல் போக முடியுமாம்.
மிக மோசமான பட்டியலில் பாகிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான் கடவுச்சீட்டு வைத்துள்ள ஒருவர் உலக நாடுகளில் 32 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும்.
ஆப்கானிஸ்தான் நாட்டு கடவுச்சீட்டு வைத்திருந்தால் 28 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும்.

அதேசமயம் இந்திய பாஸ்போர்ட்கள் மூலம் 52 நாடுகளுக்கு செல்ல முடியும்.