தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!!

600


vavuniya

அகில இலங்கை பாடசாலைகள் மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று வருகின்றன.



இப் போட்டிகளில் வவுனியா மாவட்ட மாணவர்கள் பலர் தமது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வெற்றி பெற்று வருகின்றனர்.

21 வயதிற்குட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கமலநாதன் லேகாஜினி 1 நிமிடம், 04.31 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 3வது இடத்தைப் பெற்று வெங்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். இவர் வவுனியா சைவப்பிரகாச இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார்.



19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மனோகர் தர்சிகா 31.67 மீற்றர் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.



15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவன் குமாரவேல் யோகேந்திரன் 49.36 மீற்றர் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வெற்றிபெற்றார்.


வெற்றி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் தாம் அடிப்படை வசதிகளற்ற பூம்புகார் கிராமத்திலிருந்து வந்து போட்டிகளில் பங்குபற்றியதாகவும் தன்னிடம் போட்டிக்கு தேவையான உபகரணங்கள் அற்ற நிலையிலிருப்பதாகவும், உபகரணங்கள் கிடைக்கும் பட்சதில் தேசிய ரீதியில் மேலும் சாதனைகளை படைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இவருக்கு உதவி செய்ய யாராவது முன்வரும் பட்சத்தில் அவருடன்  நேரடி தொடர்புகளை ஏற்படுத்தித்தர தயாராகவுள்ளோம்.