தெமட்டகொட பொலிஸ் பிரிவில் பேஸ்லைன் வீதி களனிவெளி ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 11.45 அளவில் காரில் வந்த நால்வர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் காரின் சாரதி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார். காரில் வந்த மேலும் மூவர் தப்பிச் சென்றுள்ளனர்.
பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சஜித் பிரியந்த என்ற நபரே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.