யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் இடம்பெறுகின்றதைக் கண்டித்து பல்லைக்கழக ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் 17 பேர் நேற்று அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இவர்கள் ஊழியர்களாகப் பணியாற்றி வந்தபோதும் கல்விசாரா ஊழியர் நியமனத்தில் இவர்கள் புறக்கணிப்பட்டுள்ளனர்.
போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள திருமதி அனந்தி சசிதரன் பா.கஜதீபன், பொ.ஜங்கரன் மற்றும் கூட்டமைப்பின் வலி. வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்ட ஊழியர்களுடன் கலந்துரையாடினார்கள்.