ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு, அரச நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
புலமைப் பரிசில் பரீட்சையை தரம் 7 அல்லது தரம் 8 ற்கு மாற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் சர்வதேச சிறுவர் தினமன்று வெளியிடப்பட்ட காரணத்தினால், சிறுவர்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளில் பங்கேற்ற அரசாங்க அதிகாரிகள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர்.
புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்களை தரம் மூன்றிலிருந்து ஆயத்தப்படுத்துவதனால் சிறுவர்கள் உளவியல் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.