வடமாகாண சபை அமைச்சராக பதவியேற்ற வைத்தியர். சத்தியலிங்கத்திற்கு வவுனியாவில் உற்சாக வரவேற்பு..!

285


sathiவடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் நேற்றயதினம் யாழ்ப்பாணத்தில் பதவிப்பிரமாணம் செய்திருந்தனர்.

வடமாகாண சபை அமைச்சரவையில் வவுனியா சார்பாக வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராக நியமனம் பெற்றார்.நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தினை முடித்துக்கொண்டு நேற்று மாலை வவுனியா திரும்பிய சத்தியலிங்கத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட கூட்டமைப்பு பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை வவுனியா பஸ் நிலையத்திலிருந்து பசார் வீதி வழியாக, மாலை அணிவித்து பட்டாசுகள் முழங்க மிகுந்த ஆரவாரத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.பசார் வீதி வழியாக இலுப்பையடிச் சந்திவரை ஊர்வலமாக அழைத்து வரப்பபட்ட அவர் இலுப்பையடிச் சந்தியில் வைத்து தனது வாகனத்தில் ஏறிச் சென்றார்.sa1 sa2