வவுனியா பாடசாலைகளுக்கிடையில் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி..!

348

netballவவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.பேர்ணாட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வியியல் கல்லூரிக்கும் வவனியா மாவட்ட பாடசாலைகளுக்குமிடையில் சமூக உறவை வலுப்படுத்தும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச் சுற்றுப்போட்டியில் வலைப்பந்தாட்ட அணிகள் 15 பங்கு கொள்ளவுள்ளதுடன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியும் நடைபெறவுள்ளமையினால் அச் சுற்றுப்போட்டியில் 12 அணிகள் பங்கு கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.