வவுனியாவில் கண்பார்வையற்றோருக்கான கிரிக்கட் போட்டி..!

275


cricketவவுனியா மாவட்ட வலவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் கண்பார்வையற்றோருக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி நாளை சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தின் தலைவர் வி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இருபது ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக ஒலியெழுப்பும் தன்மை கொண்ட பந்தில் விளையாடவுள்ள கண்பார்வையற்றவர்கள் அணியானது யாழ்ப்பாண, இரட்மலானை, தங்காலை, கொழும்பு, இராகமை, பிலியந்தலை, குருணாகலை, முல்கிரியாகல ஆகிய இடங்களில் இருந்து பங்குகொள்ளவுள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ள இப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவித்தார்.