வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம்..!

265


இன்றையதினம் வவுனியாவில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வவுனியா மாவட்டம் சார்பாக இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய சுப்பையா சுதர்சன் தலைமையில் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலய மாணவர்களுடன் வவுனியா பொலிஸாரும் இணைந்து இவ் விழிப்புணர்வு செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது மக்களுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இச்செயற்திட்டம் வவுனியா மாவட்ட சுகாதார திணைக்களம், தேசிய இளைஞர்கள் பேரவை, மற்றும் கூமாங்குளம் இளைஞர் கழகம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.(படங்கள்: பிரதீபன்)1


2

3


4

5

6

7


8

9