வவுனியா பெரியமடுவில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : தாயின் 2ம் தார கணவர் கைது!!

634

abuse112 வயதுடைய சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப் பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் தாயின் இரண்டாம் தார கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வவுனியா நெடுங்கேணி பெரியமடு பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

சிறுமியின் தாயாரது இரண்டாம் தார கணவனால் இச்சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகத்தின் பேரில் தாயாரின் இரண்டாம் தார கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.