யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!!

655

ACCIDENT_logoயாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதி நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் ஒன்றும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.