வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முதலாவது விசேட செயலமர்வு நடைபெறுகின்றது (படங்கள்)..!

833

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முதலாவது செயலமர்வு இன்று காலை யாழ்.ரில்கோ ஹோட்டலில் ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 30 உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் இந்த செயலமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த செயலமர்வானது இன்று காலை முதல் மாலை வரையில் நடைபெறவுள்ளது.

இந்த செயலமர்வில் வடமாகாண சபையின் நடவடிக்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்படுகின்றது.

இந்த செயலமர்வில் ஆளுநர் சந்திரசிறியும் கலந்து கொண்டுள்ளார்.

1 2 3 4 5