வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் நுழையும் யானைகள் நெல் மூடைகள் மற்றும் பயன்தரு மரங்களை அழித்துச் செல்வதாக பிரதேச செயலாளருக்கு அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.
மேற்படி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காப்புக்குத்தி, நயினைமடு, சின்னடம்பன், மாரா இலுப்பை மற்றும் குளவி சுட்டான் ஆகிய கிராமங்களிலே இவ்வாறு யானைகள் புகுந்து நாசம் செய்வதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்னி பகுதியில் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில், தண்ணீர் தேடி யானைகள் இரவு வேளையில் ஊர்களுக்குள் வருவதாகவும் இதனால் தாங்கள் நித்திரையின்றி தவிப்பதாகவும் மக்கள் பிரதேச செயலாளருக்கு தெரிவித்துள்ளனர்.




