குப்பை மயமாகும் வவுனியா குளங்கள் : தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை!!

317

kulamவிவசாய மாவட்டமான வவுனியா விவசாயிகளின் மூலாதாரமாக விளங்குபவை குளங்களாகும். அப்படிப்பட்ட குளங்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது.

குளங்களில் குப்பைகள் கொட்டப் படுவதால் சூழல் பாதிக்கப்படுவதோடு துர்நாற்றமும் வீசுகின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகர், வைரவ புளியங்குளம், பண்டாரிக்குளம் முதலான இடங்களில் உள்ள குளங்களில் பழைய கழிவு பொருட்கள் கொட்டப்படுவதுடன் வீடுகளில் முறிந்த மரங்களும் குளத்தில் வீசப்பட்டுள்ளன. இதனால் குளம் அசுத்தமடைவதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது.

மக்களின் நீராதாரமான குளங்களை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் விடயத்தில் அதிகாரிகளை மட்டும் குறைகூறுவதை விடுத்து மக்களும் தங்கள் கடமையை உணர்ந்து குப்பைகளை குளங்களில் கொட்டுவதை தவிர்த்தால் குளங்களை பாதுகாக்க முடியும்.