வவுனியா வைரவபுளியங்குளம் இளவேனில் பாலர் பாடசாலையின் கலை விழா!!(படங்கள்)

784

வவுனியா வைரவபுளியங்குளம் இளவேனில் பாலர் பாடசாலை மற்றும் குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையத்தின் இவ் ஆண்டு கலை விழா நேற்று சனிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது

பாடசாலையின் அதிபர் திருமதி தமயந்தி ஜெயரட்னாவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் சிறப்பு விருந்தினராக சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபர் செல்வி.உமா இராசசையாவும் கௌரவ விருந்தினராக நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் நாவலனும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சிறுவர்களின் கண்கவர் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன. பங்குபற்றிய சிறுவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

2 3 4 5  7 12 13 14