ஆஷஸ் முதல் டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து..!

374

ashesஅவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் முதல் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி அபாரமாக பந்துவீசி 273 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்தது.

முதலில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியாவுக்கு, இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.

அவுஸ்திரேலிய துவக்க வீரர் ரோஜர்ஸ் ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்த நிலையில், பின்னர் வந்த வார்னர் நிதானமாக ஆடி அரை சதத்தை நெருங்கினார். ஆனால் அவர் 49 ஓட்டத்தில் ஸ்டுவார்டு பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

முன்னதாக வாட்சன் 22 ஓட்டங்களிலும், கிளார்க் 1 ஓட்டத்திலும் பிராட்டிடம் ஆட்டம் இழந்தனர்.

100 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் அளித்தார் ஹேடின்.

ஸ்மித்துடன் இணைந்து ஆடிய ஹாடின், 100 பந்துகளில் அரை சதம் கடந்தார், ஸ்மித் 31 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாடின்- ஜான்சன் ஜோடி பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தியது.

இந்நிலையில் 64 ஓட்டங்கள் எடுத்த ஜான்சனையும் பெவிலியனுக்கு அனுப்பினார் பிராட், சிடில் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் இன்று ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ஓட்டங்கள் சேர்த்திருந்தது.

தற்போது ஹேடின் 78 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் பிராட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.