வவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா!!

2256

 

2019 ஆம் வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளும் கால்கோள் விழா இன்று வவுனியாவில் அனைத்து பாடசாலைகளிலும் நடைபெற்றது.

இதன் ஒரு அங்கமாக வவுனியா இலங்கை திருச்சசபை தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று (17.01.2018) காலை 9 மணியளவில் கால்கோள் விழா பாடசாலை முதல்வர் க.நவரட்ணம் தலமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலை வலயபிரதிநிதி வசந்தி குலராஜா, பாடசாலையின் பிரதி அதிபர் ஜெரோன் பிரதாபன், உதவி அதிபர் தர்மரட்ணம், பகுதித்தலைவர் பு.சத்தியமூர்த்தி, சமயத்தலைவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் தரம் ஒன்றைச் சேர்ந்த பல மாணவர்கள் ஏனைய மாணவர்களால் வரவேற்கப்பட்டதுடன் சிறப்பு நிகழ்வுகள் பலவும் நடைபெற்றன.