வவுனியாவில் ஒளவையார் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

690

வவுனியா சின்னப்புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத்தூபியில் ஒளவையாரின் நினைவு தினம் இன்று(20.01) காலை 9 மணியளவில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகர சபைத்தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்றது.

ஒளவையாரின் நினைவுப் பேருரையை வவுனியா தெற்கு கல்வி வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி நிறைமதி நிகழ்த்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து வருகைதந்த பிரதிநிதிகள் ஒளவையாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், சு.கண்டீபன், சமந்தா செபநேசராணி, பாஸ்கரன் ஜெயவதனி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலர் விக்னா நகரசபை ஊழியர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.