வவுனியாவில் 40 வருட சேவை செய்த ஆசிரியையை கெளரவிக்கும் நிகழ்வு!!

665

 

ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் திருமதி நடராஜா வசந்தாதேவி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.அப்துல் நஸார் தலைமையில் இந் நிகழ்வு இன்று(21.01) காலை இடம்பெற்றது. இதன்போது பாடசாலை பிரதான நுழைவாயிலில் இருந்து குறித்த ஆசிரியரை மாலை அணிவித்து பான்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆசிரியர்கள், மாணவர்கள் அழைத்து வந்ததுடன், பாடசாலை முன்றலில் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

திருமதி நடராஜா வசந்தாதேவி கடந்த 40 வருடமாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்ப்பாட ஆசிரியராக கடமையாற்றியுள்ளதுடன், வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலயத்தில் 9 வருடமாக கல்வி கற்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் வவுனியா தெற்கு வலயம் சார்பாக பிரதிகல்விப் பணிப்பாளர் சு.அமிர்தலிங்கம், உதவிக் கல்விப் பணிப்பாளர் பரணிதரன் உள்ளிட்ட குழுவினர் பாடசாலைக்கு வருகை தந்து ஆசிரியரை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.