வவுனியாவில் மதுக்கடைகளிற்கான அனுமதிகளை ரத்துசெய்யவேண்டும் : வெகுஜன அமைப்பு கோரிக்கை!!

707

போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என பிரகடனபடுத்தியிருக்கும் ஐனாதிபதியின் ஆட்சியில் மதுப்பாவனையை அதிகரிக்கசெய்ய, மதுபானசாலைகளிற்கு அனுமதிவழங்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு புதிதாக வழங்கபட்ட அனுமதிகளை உடன்ரத்துசெய்யுமாறு சமூகநீதிக்காகன வெகுஐனஅமைப்பின் வவுனியா மாவட்டசெயளாளர் சு.டொன்பொஸ்கோ வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது, வவுனியா புதிய பேருந்துநிலையத்திற்கு அருகாமையில் மதுபானசாலை அமைக்க அனுமதித்திருப்பது மிகவும் கண்டணத்திற்குரிய ஒன்றாகும்.

மக்களின் குடியிருப்பிற்கு மத்தியிலும் பொதுமக்கள் அதிகமாக வந்துசெல்லும் பகுதியிலும் வைத்தியசாலை, மாவட்டசெயலகம், பிரதேசசெயலகம் என்பவற்றிற்கு அருகாமையில் குறித்த மதுபானசாலையை அனுமதித்திருப்பது மது பாவனையை ஊக்கபடுத்துவதாகவே அமையும்.

வவுனியா நகர்புறத்தில் மாத்திரமன்றி வளர்ந்துவரும் கிராமமான ஓமந்தையிலும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கபட்டிருக்கிறது. இது ஊர்தோரும் மதுபாவனையை பரவலாக்கும் செயற்பாடேயாகும்.

இது ஒரு மக்கள் விரோத செயற்பாடேயாகும். மதுபானசாலைகள் பெருகுவது ஒரு சில தனிநபர்கள் பணம்சேர்பதற்கு உதவுமேயன்றி நாட்டுக்கோ மக்களுக்கோ நன்மை பயக்காது. தீமையையே விளைவிக்கும்.

அரசுக்கு வருமானமாக மதுவரி கிடைக்கின்றபோதும் மதுவினால் ஏற்படும் நோய்களை குணமாக்க அரசுசெலவிடும் மருத்துவசெலவு அதிகமானதாகும். எனவே மதுபானசாலைகள் அமைப்பதை அனுமதிக்கமுடியாது. புதிய மதுபானசாலைகளிற்கான அனுமதியை ரத்துசெய்யவேண்டும்.

அத்துடன் பொதுமக்களிற்கு இடையூறாக அமைந்துள்ள மதுபானசாலைகளின் அனுமதிகள் ரத்து செய்யபடவேண்டும் என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.